வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் 3 பேருக்கு அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 08:18 am

anna-awards-announced

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கங்களை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சிறுவன் சூரியகுமார், போடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது. 

சென்னை அண்ணா நகரில், பெண்ணிடம் நகையை திருடிவிட்டு ஓடிய திருடனை கையும் களவுமாக பிடித்த சிறுவன் சூரியகுமார்,  குரங்கணி தீ விபத்தில் 8 பேரை காப்பாற்றிய ரஞ்சித் குமாருக்கும், வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேரை தகுந்த நேரத்தில் சென்று காப்பாற்றிய தஞ்சை ஸ்ரீதருக்கும் அண்ணா விருது வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று நடக்கும் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த விருதை வழங்குகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close