சென்னையில் குடியரசு தினவிழா: தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர்!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 09:40 am
tn-governor-hoists-flag-at-chennai

குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார்.

நாட்டின் 70வது குடியரசு தினம் வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினாவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரியாக இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தற்போது ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாணவ, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன பின்னர் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close