சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கொடியேற்றினார்!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 09:26 am
salem-collector-rohini-hoists-the-flag

70ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட காவல்துறை ஊர்காவல் படையினர் தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து  இந்த நிகழ்ச்சியில் 58 பயனாளிகளுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் பள்ளிக்குழந்தைகளின் கண்கவர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close