பத்ம விருது பெறும் முதல் திருநங்கை ‘நர்த்தகி நடராஜ்’ - தமிழகத்தைச் சேர்ந்தவர் !!..

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 12:51 pm
tamilnadu-s-narthagi-natarajan-first-transwoman-to-get-padmashri

நாட்டிலேயே பத்ம விருது பெறும் முதலாவது திருநங்கை என்ற பெருமையை அடைந்திருக்கிறார் நர்த்தகி நடராஜ். பரதநாட்டிய கலைஞரான இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

மதுரை மாநகரில் கடந்த 1964ம் ஆண்டில் பிறந்தவர் நடராஜ். அவரது பால்ய வயது நண்பன் சக்தி. பிறப்பால் ஆணாக இருந்தாலும், உணர்வால் நாம் வேறுபட்டவர்கள் என்பதை அவர்கள் இருவரும் உணர்ந்தனர். இதன் விளைவாக, வீட்டை விட்டு வெளியேறினர். இளமையில் வறுமை, சமூக புறக்கணிப்பு போன்ற அவலங்கள் இருவரையும் தொற்றிக் கொண்டன. இருவரும் இணைந்த வாழ்க்கையின் இன்னல்களை எதிர்கொண்டனர். ஆனால், நடராஜுக்கு நடனக் கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. 

இந்த நிலையில்தான் 1984இல் தஞ்சாவூரைச் சேர்ந்த கிட்டப்பா பிள்ளை என்ற பரதநாட்டிய பயிற்றுநரை சந்தித்தார் நடராஜ். அதன் பிறகு ‘நர்த்தகி நடராஜ்’ என்றானார். கிட்டப்பாவிடம் அவரது குரு குலத்தில் தங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பரதம் கற்றுக் கொண்டதில் ஆகச் சிறந்த கலைஞராக உருவெடுத்தார் நர்த்தகி. பின்னச் சென்னைக்கு இடம்பெயர்ந்து பரதநாட்டிய பயிற்சி நிலையத்தை தொடங்கினார். 

இன்றைக்கு அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் நர்த்தகியின் பயிற்சி நிலையம் கிளைகளைக் கொண்டுள்ளது. பரதநாட்டியம் மட்டுமன்றி தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றையும் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு சங்கீத அகாடமியின் புரஷ்கார் விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். தற்போது தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஏழு பேரில் நர்த்தகி நடராஜும் ஒருவர். இந்த விருதைப் பெறும் முதலாவது திருநங்கை என்ற பெருமையை அடைந்துள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close