ஆசிரியர்கள் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு: செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 01:59 pm
cm-assures-to-take-action-for-end-the-teachers-strike


ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் பழனிசாமியுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‛‛பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜேக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், அரசு பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றிருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைககள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார். 

எனவே, எந்த வகையிலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது. அதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு கட்டாயம் மேற்காெள்ளும்’’ என அவர் கூறினார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close