சம்பளத்தை உயர்த்தினால் அது மக்கள் தலையில் விடியும்: ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 02:14 pm
if-salary-incresed-then-tax-will-be-increase-jayakumar

சம்பள உயர்வு, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜேக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‛‛ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியா பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். 
தற்போதைய சூழலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, பழைய பென்ஷன் திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டுமென்றால், கூடுதல் நிதி செலவை சமாளிக்க வரியைத்தான் உயர்த்த வேண்டும். அது, மக்கள் தலையில் தான் விடியும்’’ என, அமைச்சர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close