பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 07:49 pm
madurai-prepares-for-modi-s-visit

மதுரையில் உருவாக்கப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரை வரவிருக்கும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  அடிக்கல் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம்  பிற்பகல் மதுரை வந்தடைகிறார் மோடி. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவுடன், மதியம் நடைபெறும் பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் போன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் வியூகம் குறித்து சிறப்புரை ஆற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close