பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ: தமிழிசை பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 08:08 pm
tamilisai-praises-padmashree-award-for-bangaru-adigalar

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு, பத்மஸ்ரீ விருதை வழங்க உள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

ஆன்மீகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காரு அடிகளார் சேவைகள் செய்துவருவதாகவும் பாராட்டினார். மேலும், பங்காரு அடிகளாருக்கு விருது கொடுப்பது சரியா என, அவரால் பலனடைந்த பல பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் என்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

ஆன்மீக குரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் மீது விமர்சனங்கள் எழுப்பி வருகின்றன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close