கோபேக் மோடியை பின்னுக்குத் தள்ளிய மதுரைதேங்க்ஸ்மோடி!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 11:49 am
maduraithanksmodi-beats-gobackmodi

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர்  நரேந்திர மோடி இன்று காலை 11 மணியளவில் மதுரை வருகிறார். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்  மோடி பங்கேற்கிறார்.

இந்த நிலையில், மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டுவிட்டரில் #GoBackModi எனும் ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வந்தது.

இதனை முறியடிக்கும் வகையில், #MaduraiThanksModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் தற்போது இந்திய அளவில் ட்ரண்டிங் ஆகிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதுவரை  இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி மோடிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோன்று #TNWelcomesModi என்ற ஹேஸ்டேகும் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை புரிந்தார். 

அப்போதும், #GoBackModi, #TNWelcomesModi  ஆகிய இரு ஹேஸ்டேக்குகளுக்கும் இடையே டுவிட்டரில் கடும் போட்டி நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close