மோடி வருகை: மதுரையில் 5 அடுக்குப் பாதுகாப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 12:01 pm
pm-modi-s-visit-tight-security-in-madurai

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம், தோப்பூர் உள்ளிட்ட மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி,  11.15 மணியளவில், தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத்தொடர்ந்து மதுரை, நெல்லை மற்றும் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்நோக்கு சிறப்பு மருத்துவப் பிரிவுகளை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து, 12 மணியளவில் பாஜக சார்பில், மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close