பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை பரிசளித்தார் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 12:09 pm
cm-edappadi-palanisamy-gives-meenakshi-amman-statue-to-pm-modi

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் சிலையை பரிசாக அளித்தார். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சற்றுமுன் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

தொடர்ந்து, அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அவருக்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் சிலையை பரிசாக அளித்தார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close