சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழகம்: முதல்வர் புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 01:01 pm
madurai-aiims-hospital-foundation-update-cm-deputy-cm-speech

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா தொடங்கியதையொட்டி முதலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை வரவேற்று பேசினார். 

அப்போது அவர், "மதுரைக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் மோடியை தமிழக மக்களின் சார்பாக வரவேற்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சட்டத்தின் மூலம் மீட்டெடுத்து தந்த பிரதமர் மோடிக்கு நன்றி. நாட்டு மக்களுக்காக ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்ககிறார் பிரதமர் மோடி. தற்போது அவர் மதுரைக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி" என பேசினார். 

தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பிரதமருக்கு நன்றி தமிழக அரசின் கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய ஒப்புதல் அளித்தது. சுகாதாரத் துறையில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இந்தியா முழுவதுமுள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது. 

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு,  மகப்பேறு உள்ளிட்டவற்றுக்காக தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்க்கு கூடுதல் மதிப்பை தருகிறது" என்று பேசினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close