இடஒதுக்கீடு விவகாரம்: எதிர்க்கட்சிகளை சுயநல சக்திகள் என சாடிய மோடி!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 03:21 pm
10-reservation-isn-t-affect-other-communities

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள இடஒதுக்கீடு குறித்து சில சுயநல சக்திகள் தவறான கருத்துகளை பரப்பி வருவதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி சாடினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டால் பட்டியலினத்தவர் உள்ளிட்ட பிற சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் பாதிப்பில்லை என்றும் அவர் பேசினார்.

இதுதொடர்பாக அவர், மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில்  மேலும் பேசியது:

சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திலும் மத்திய பாஜக அரசு அக்கறை கொண்டுள்ளது. 

அதனால்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான  10 சதவீத இடஒதுக்கீடு அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்குள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கான சமூக நீதியும் உறுதி செய்யப்படும்.

மேலும், இதனால் பட்டியலினத்தவர் (எஸ்.டி.) உள்ளிட்ட பிற சமூகத்தினருக்கு உயர்க் கல்வி மற்றும் அரசு வேலைகளில் உள்ள வாய்ப்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இடஒதுக்கீடு விஷயத்தை தமிழகத்தில் சிலர் தங்களது சுயநல அரசியலுக்காக தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் அவர்கள் எதிர்மறையான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அத்தகைய எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களிடம் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மோடி எச்சரித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close