நான்கரை ஆண்டுகள்... 35 ஆயிரம் கி.மீ. சாலைகள்...மோடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 02:20 pm
35-000-km-new-roads-in-past-four-and-half-years-modi

கடந்த நான்கரை ஆண்டுகளில் புதிதாக 35 ஆயிரம் கிலோமீ்ட்டர் அளவுக்கு நாட்டில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியது:
நாட்டின் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 
அதாவது கடந்த  நான்கரை ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 35 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் நீர்வழிப் போக்குவரத்து, வானூர்தி சேவை உள்ளிட்ட பிற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தனுஷ்கோடியை ராமேஸ்வரம், பாம்பனுடன் இணைக்க 21,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும். தென்னகத்தில் தூத்துக்குடி துறைமுகம் முக்கிய துறைமுகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரை உள்ளிட்ட  தமிழகத்தின் 10 நகரங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்பு துறையில் நாடு அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது என, பிரதமர் மோடி கூறினார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close