நான் எப்போதும் ஏழைகளின் பக்கம்தான் :மோடி உறுதி

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 02:44 pm
i-am-always-behind-poor-people-modi

ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வளவு பேர் ஒன்று சேர்ந்தாலும், நான்  எப்போதும் ஏழைகளின் பக்கம்தான் இருப்பேன் என்று பிரதமர் மோடி உறுதிப்பட தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியதாவது:

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஊழல் புரிந்துவிட்டு உள்நாட்டு இருப்பவர்களாக இருந்தாலும் சரி... வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களாக இருந்தாலும் சரி...

அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

தேசத்தின் நலன்கருதி மத்திய அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். இந்நாட்டின் காவலனாக விளங்கும் என்னை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க அவர்கள் கங்கணம் கட்டியுள்ளனர்.

 இப்படி எத்தனைபேர் ஒன்று சேர்ந்தாலும், நான் எப்போதும்  ஏழை மக்களின் பக்கம்தான் நிற்பேன் என்று மோடி உறுதிபட தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அதனை விமர்சிக்கும் வகையில் மோடி இவ்வாறு பேசியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close