தமிழகத்தில் யார் அலை வீசுகிறது? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 03:34 pm
minister-jayakumar-press-meet

தமிழகத்தில் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அலை தான் வீசுகிறது என தமிக மீன்வளத்துறை மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அலை தான் வீசுகிறது. மக்கள் நலன் கருதி அதிமுக தலைமையை ஏற்று வரும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம்.

தமிழகத்தை பொறுத்தவரை தமிழக மக்களின் நலன் கருதி முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்து பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்தி வருகிறார். 

வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். காங்கிரஸில் பிரியங்காவிற்கு பதவி வழங்கப்பட்டுள்ளது, பாஜக- காங்கிரஸ் இடையே உள்ள போட்டியை காட்டுகிறது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close