முதல்வர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 03:33 pm
jactto-geo-protest-update

தமிழக முதல்வர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், எந்த நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் நாங்கள் வரத்தயார் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக ஆசிரியர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணி பேசியபோது, "நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைநகரங்களில்  சாலைமறியல் போராட்டம் நடைபெறும். முன்னதாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கப்படவேண்டும்.

அமைச்சர் ஜெயக்குமார் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்த நேரத்தில் அழைத்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரத்தயார்" என்றார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close