நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால்... ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 05:47 pm
teachers-should-come-to-scholl-tomorrw-education-director

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், நாளை பணிக்கு திரும்ப வேண்டும்; இல்லையென்றால், அவர்களின் பணியிடங்கள், காலிப் பணியிடங்களாக கருதப்பட்டு, தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜேக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு திரும்பும்படி பல முறை அரசு உத்தரவிட்டும், போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கை விடவில்லை. 

இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை உடனடியாக கை விட்டு, நாளை பணிக்கு திரும்ப வேண்டும். 

நாளை பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்படும். அந்த பணியிடங்களில், 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்’’ என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close