மத்திய, மாநில அரசுகள் ஜவுளித்துறையில் இணைந்து செயல்படுகின்றன: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 07:05 pm
central-and-state-government-combined-work-in-textile-sector

மத்திய அரசும், தமிழக அரசும் ஜவுளித்துறையில்  இணைந்து செயல்பட்டு வருவதாக மத்திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். 

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி இன்று முதல் வரும் 29 தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியை மத்திய  ஜவுளித்துறை  அமைச்சர் ஸ்மிருதி இராணி  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுப்பிரமணிய பாரதியும், திருவள்ளுவரும் பிறந்த இந்த தமிழக மண்ணிற்கு வந்திருப்பதில்  பெருமை கொள்வதாகவும், இந்த ஜவுளித்துறை கண்காட்சி நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறை சார்ந்த தொழில்களை ஒருங்கிணைக்க உதவுவதாகவும் தெரிவித்தார்.  

விசைத்தறிகளை நவீன படுத்த மத்திய அரசால் வழங்கப்பட்ட தொழில் நுட்பங்கள் 65 சதவீதம் தமிழகத்தை அடைந்து இருப்பதாகவும், விசைதறிகளுக்கு பஞ்சாலைகளில் இருந்து நூல் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியதில்  45 சதவீதமான பங்குகளை  தமிழக ஜவுளித்துறை அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

பஞ்சாலைகளுக்கு ஏற்பட்ட  நெருக்கடியை தொடர்ந்து, மத்திய பஞ்சு கழகம் இடைதரகர்கள் மூலம் பஞ்சு விநியோகம் செய்வதை தடுத்து நேரடியாக பயனாளிகளுக்கு பஞ்சு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்தியாவில் உள்ள பஞ்சாலைகள் தமிழகத்தில் 60 சதவீதம் இருக்கும் நிலையில், கப்பல் வழியாக உள்நாட்டிலயே பஞ்சு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மத்திய அரசும், தமிழக அரசும் ஜவுளித்துறையில்  இணைந்து செயல்பட்டு வருவதாக  தெரிவித்த அவர், ஜி.எஸ்.டி வரி விலக்கை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பிரதமர் ரூ.40 லட்சம் வரை ஜி.எஸ்.டி வரி விலக்கு அளித்திருப்பதை குறிப்பிட்டார். மேலும், இந்த கண்காட்சிக்கு வந்த முதலீட்டாளர் அனைவரும் விருந்தோம்பலில் சிறந்த மாவட்டமாக உள்ள கோவையின் தோசையை சுவைத்து பாருங்கள் எனவும் காஞ்சியின் பட்டை வாங்கி செல்லுங்கள் எனவும்  மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close