நாளையும் ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடரும்: ஒருங்கிணைப்பாளர்

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 09:16 pm
jacto-geo-protest-will-go-as-planned-tomorrow

வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளைக்குள் பணிக்கு திரும்பினால் எந்த நடவடிக்கையும் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ள நிலையில், போராட்டம் நாளையும் நடைபெறும் என ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்வு நேரத்தில் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் அரசு பணியாளர்கள் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். நாளைக்குள் பணிக்கு அரசு ஆசிரியர்கள் திரும்பிவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close