பிப்ரவரி 19 -இல் மோடி மீண்டும் தமிழகம் வருகை: அமைச்சர் தகவல்

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 07:55 am
pm-modi-will-come-to-tamilnadu-on-feb-19-pon-radhakrishnan

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களின் மேலும் கூறியது:
தமிழகத்துக்கு என்னதான் பல நல்லத் திட்டங்களை கொண்டு வந்தாலும், மத்திய அரசுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவதையே மதிமுக வழக்கமாக கொண்டுள்ளது. 

நேற்று மதுரையில்  வைகோ தலைமையில் மதிமுகவினர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

வரும் மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் பாஜக கூட்டணியை உரிய நேரத்தில் அறிவிப்போம். எங்கள் கூட்டணி இங்கு 30 இடங்களுக்கு குறையாமல் வெற்றிப் பெறும்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19 -ஆம் தேதி, கன்னியாகுமரிக்கு வருகை புரிய உள்ளார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close