ஒப்பாரி அரசியல் செய்பவர் வைகோ: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 09:37 am
tamilisai-soundararajan-condemned-vaiko

ஒப்புக்கு அரசியலும், ஒப்பாரி அரசியலும் செய்பவர் வைகோ என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த அவர், " பிரதமர் மோடி வருகையின்போது மதுரையில் கருப்புக் கொடி காட்டிய வைகோவுக்கு கண்டனம் தெரிவித்தார்.கருப்புக் கொடி காட்டியது அவர்களின் சுய விளம்பரமே தவிர, அதன் மூலம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க முடியாது என அவர் கூறினார்.

ஒப்புக்கு அரசியலும், ஒப்பாரி அரசியலும் செய்பவர் வைகோ எனவும் தமிழிசை சாடினார். 

மேலும், கடமையாற்ற வந்தோரை கண்ணியக்குறைவாக பேசுவதுதான் பெரியார், அண்ணாவிடம் கற்றப்பாடமா என கேள்வி எழுப்பிய அவர், வைகோ எம்பியாக இருந்தபோது, தென்தமிழகத்திற்கு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை கூறமுடியுமா எனவும் கேள்பி எழுப்பினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close