தற்காலிக ஆசிரியர் பணியிடம்: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்...!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 10:35 am
temporary-teacher-work-1-lakh-application

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி பள்ளிக்கல்வித்துறை எச்சரித்ததோடு, தற்காலிக ஆசிரியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது.

மேலும், ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பவில்லையெனில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக ஆசியரியர் பணியிடங்களுக்கு இதுவரை1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இன்று ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக 90 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close