ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு..!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 11:56 am

support-for-jacto-geo-struggle

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இருப்பினும், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்திற்கு டிபிஐ சங்கம், தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம், தலைமை ஆசிரியர்கள் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close