தலைமை செயலர் மற்றும் நிதித்துறை செயலருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 02:54 pm
minister-sengottaiyan-meets-tn-chief-secretary

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலர் மற்றும் நிதித்துறை செயலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது. மேலும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் தரப்படும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 

இதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து, நிதித்துறை செயலர் சண்முகத்தையும் சந்தித்து பேசுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close