ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை ஊழியர்கள்!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 03:34 pm
jactto-geo-protest-update-dpi-and-judicial-department-announced-strike-for-supporting-jactto-geo

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் ஆகியோரும் நாளை முதல் பங்கேற்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடும் பொருட்டு, 'போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் தரப்படும்' என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் நாளை முதல் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அந்தந்த சங்கங்கள் அறிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close