பள்ளிக்கல்வித்துறையின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது; பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள்!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 03:26 pm
jactto-geo-protest-teachers-are-back-from-protest

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததையடுத்து, 5% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிடும் பொருட்டு, 'போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்  ஆசிரியர்களுக்கு விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் தரப்படும்' என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி சலுகை ஒன்றை அறிவித்தது. மேலும், அவர்களுக்கான பணியிட மாற்ற ஆணை உடனடியாக இன்றே  வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பினை அடுத்து  போராட்டத்தில் ஈடுபட்ட 5% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு விருப்பப்படி, விரும்பும் இடத்திற்கு பணியிடமாற்றம் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close