திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்கும்: தேர்வுத்துறை அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 04:21 pm
practical-exams-are-starts-from-feb-1

திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களின் போராட்டத்தால் செய்முறைத் தேர்வுகள் நடைபெறுவதில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வருகிற மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. 

இந்நிலையில், 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத்தேர்வுகள் வருகிற பிப்ரவரி 1ம் தேதி தொடங்க இருக்கின்றன. ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாலும், பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாலும் தேர்வுகள் பாதிக்கப்படும் என்று கருதிய நிலையில் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

பள்ளிக்கல்வித்துறையின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆனது; பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close