அடிக்கடி ஏடிஎம் பயன்படுத்துபவரா நீங்கள்? பிரபல வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் இதோ..

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 07:28 pm
charges-levied-by-banks-on-atm-transactions

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா முழுவதும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. துவக்கத்தில் ஏடிஎம்களில் பணம் எடுக்க வசூலிக்கப்பட்ட கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி  வைத்த வங்கிகள், மீண்டும் கட்டணங்களை வசூலித்து வருகின்றன. தற்போது பல வங்கிகள், சில மாற்றங்களை ஏற்படுத்தி,  மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச அளவு பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக வழங்குகின்றன. நாட்டில் அதிக அளவு ஏடிஎம்-களை கொண்டுள்ள பிரபல வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை இப்போது நாம் பார்க்கலாம்...

SBI வங்கி

எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்-களில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால் மற்ற வங்கிகளின் ஏடிஎம்-மை பயன்படுத்தும்போது, குறைந்தபட்சம் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன. 5வது முறைக்கு மேல், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கு 20 ரூபாயும், பணம் இல்லாத பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஏடிஎம்-களில், பண பரிவர்த்தனைக்கு 169 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும் வசூலிக்கப்படும்.

HDFC வங்கி

எச்டிஎஃப்சி வங்கியிலும் அந்த வங்கியின் ஏடிஎம்களில், அதன் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க எந்த கட்டணமும் கிடையாது. அதேபோல், மற்ற வங்கி ஏடிஎம்-களில், பணமில்லா பரிவர்த்தனைகள் இலவசம். ஆனால், மற்ற வங்கிகளில் 5 பண பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படும். 10,000 ரூபாய் வரை 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 110 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 15 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

ICICI வங்கி

ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்களை பயன்படுத்தும் போதும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் செய்யப்படும் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அது, பண பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி, பணமில்லா பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி; 5 தான் உச்சவரம்பு. அதற்கு பின், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாய் வசூலிக்கப்படும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close