தமிழக மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 08:24 am
5-fisherman-released-from-qatar-jail

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிலிருந்து கடந்த ஜனவரி 13-ஆம் தேதி சென்றபோது, எல்லைத் தாண்டி சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை கத்தார் நாட்டின் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். 

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் முயற்சியால், கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்த அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close