96% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்: பள்ளிக்கல்வித் துறை

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 11:15 am
96-teachers-returned-to-work

மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96% பேர் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

ஜாக்டோ, ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 8 நாட்களாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பணியிடம் காலியாக கருதப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது. மேலும், இன்று காலை 9 மணிக்கு பணிக்கு திரும்ப உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 96% பேர் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், பணிக்கு வந்த இடை நிலை ஆசிரியர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பணிக்கு வராத ஆசிரியர்களில் 1,177 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close