‛சரக்கு’ பிரியர்களுக்கு நாளை திண்டாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 01:07 pm
hc-orders-to-shut-all-tasmac-tomorrow

தேச தந்தை மகாத்மா காந்தி மறைந்த தினத்தையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் அனைத்து, டாஸ்மாக் கடைகளையும் மூட, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்விட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த, ரத்தீஷ் என்பவர் இன்று தனது பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை ஒன்று, மக்களுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து, மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று, இந்த வழக்கை, 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த உத்தரவோடு சேர்த்து, நாளை காந்தியின் நினைவு  தினம் அனுசரிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்விட்டுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close