போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என ஆசிரியர்களிடம் கையெழுத்து..!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 11:37 am
sign-the-teachers-for-we-will-no-struggle

போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்ற பின்பே ஆசிரியர்கள் பணிக்கு அனுமதிக்கபடுகின்றனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இன்று காலை 9 மணிக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் பணிக்கு வராத ஆசிரியர்கள் பணியிடம் காலியாக கருதப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில், இன்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என எழுத்துப்பூர்வமான கடிதத்தில் கையெழுத்து பெற்ற பின்பே பணிக்கு அனுமதியளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close