தொடக்க பள்ளி ஆசிரியர்கள் 225 பேர் சஸ்பெண்ட்

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 02:22 pm
225-teachers-suspended


வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 225 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பும் படி அரசு பல முறை வலியுறுத்தியும், ஜேக்டோ - ஜியாே அமைப்பினர், போராட்டத்தை கைவிடவில்லை. எனினும், அவர்களில் பலர், பணிக்கு திரும்பிவிட்டதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

பணிக்கு திரும்பாத, உயர் நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியரகள், 1,049 பேர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பணிக்கு திரும்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 225 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close