பிளாஸ்டிக் தடை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 03:53 pm

plastic-ban-order-for-response-of-the-central-government

பிளாஸ்டிக் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதையடுத்து, நெகிழிக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிப்.4ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close