நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் ஓட்டுரிமை கிடையாது: உயர்நீதிமன்ற கிளை அதிரடி

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 08:34 pm
no-name-in-voters-list-for-water-bodies-occupiers

நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட  வழக்கில், ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உச்ச நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் பட்டா போட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு பத்திரப்பதிவு செய்யக் கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது; மின்சாரம் குடிநீர் சேவைகளை தடை செய்ய வேண்டும்; என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

வாக்காளர் அட்டையில், பெயர்களை சேர்க்கக் கூடாது என்ற உத்தரவை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close