ஐ.டி. ரெய்டில் சிக்கிய கருப்புப் பணம் எவ்வளவு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 08:30 am

rs-15-crore-black-money-seized-in-it-ride-at-chennai-and-kovai

சென்னை மற்றும் கோவையில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களில் நேற்று நடத்தப்பட்ட வருமான வரித் துறையின் அதிரடி சோதனையில் மட்டும் ரூ.15 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் குழுமம், லோட்டஸ் குழுமம், ஜி.ஸ்கொயர் மற்றும் பெரம்பூர் ரேவதி குழுமம் ஆகிய பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான நகைக்கடைகள், துணிக்கடைகள், கட்டுமான நிறுவன அலுவலகங்கள் என மொத்தம் 74 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சென்னையில் 72 இடங்களிலும், கோவையில் இரண்டு இடங்களிலும் இச்சோதனை நடத்தப்பட்டது.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் நேற்று  ஒரு நாளில் மட்டும் ரூ.15 கோடி கணக்கில் வராத கருப்புப் பணம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடரும் சோதனை : இந்த நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரிச் சோதனை தொடர்கிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close