தற்காலிக ஆசிரியர்களுக்கான தேவை இல்லை: பள்ளிக்கல்வித் துறை

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 10:52 am
no-need-for-temporary-teachers

99 சதவீதம் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் 99 % பேர் இன்று பணிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால், தற்காலிக ஆசிரியர்களின் தேவை எழவில்லை எனவும், தற்காலிக ஆசிரியர்களுக்காக பெறப்பட்ட 2 லட்சம் விண்ணப்பங்களில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடையவை எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close