நிதிநிலை சீராக இருக்கும்போது அரசு ஊழியர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்: ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 12:00 pm
government-employees-request-will-be-reviewed

நிதிநிலை சீராக இருக்கும்போது அரசு ஊழியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறளை அரபிக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

பலமுறை அனைத்து உயர்நிலைகளிலும் பேச்சுவார்த்தை நடத்தி, நிதி நெருக்கடி இருந்தும்கூட 14,500 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.

தற்போது கொடுக்க மனம் இருந்தாலும் கொடுக்க முடியாத சூழலில் அரசு உள்ளது. நிதி நிலை சீராக இருக்கும்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close