ரயிலில் உள்ள வெஸ்டர்ன் கழிப்பறையை பயன்படுத்த தெரியாமல் கால் மாட்டிக்கொண்டு தவித்த பயணியை ரயில்வே போலீசார் மீட்டனர்.
தெலுங்கானா மாநிலம், சென்னூர் அருகேயுள்ள வேமணபள்ளியை சேர்ந்தவர் பெஞ்சஞ்கி பாரதம்மா (40). சென்னையில் தங்கியிருக்கும் இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு செல்ல நேற்று மாலை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.11ம் எண் பெட்டியில் அமர்ந்துள்ளார். அப்போது, ரயிலில் உள்ள வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தியதில் அவரது வலது கால் கழிவறை தொட்டிக்குள் மாட்டிக்கொண்டது.
வலி தாங்கமுடியாமல் சத்திமிட்டு அழ, அவரது குரல் கேட்டு ரயில்வே ஊழியர்கள் வந்து மீட்க முயற்சி செய்துள்ளனர். அவர்களது முயற்சி பலனற்று போகவே, ரயில்வே போலீசாருக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து, போலீசார் கட்டர் மூலம் கழிவறை தொட்டியை வெட்டி எடுத்தனர். இதில் பாரதம்மாவுக்கு லோசான கீரல் ஏற்பட்டது.
போலீசார் விசாரித்ததில் அவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருக்கு முதலுதவி செய்து, டிக்கெட் எடுக்காமல் இனி ரயிலில் பயணம் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனால், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்டரலில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
newstm.in