ராகுலின் 'ராம அவதாரம்' : சர்ச்சையை ஏற்படுத்திய பேனர்!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 02:42 pm
poster-depicting-rahul-gandhi-as-lord-ram-comes-up-in-patna-ahead-of-his-rally

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலை கடவுள் ராமராக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர் அரசியல் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருவதையொட்டி, காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற பிப்ரவரி 3ம் தேதி மாபெரும் பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் இந்த பேரணியில் பங்கேற்க இருக்கின்றன.

இதற்காக அம்மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் ஒன்று அரசியல் பிரமுகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடவுள் ராமராக சித்தரித்து படம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக ஐந்து மாநில சட்டசபை தேர்தல் சமயத்தில் ராகுல்காந்தியை சிவ பக்தராக சித்தரித்து காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர் என்று குறிப்பிடத்தக்கது. அரசியல் லாபத்திற்காகவே ராகுல் காந்தி இவ்வாறு செய்து வருகிறார் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close