இளையராஜா நிகழ்ச்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 02:09 pm
madras-hc-judgement-adjourned-for-ilaiyaraja-function-issue-case

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா நிகழ்ச்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கட்டிடம் கட்டுவதற்காக  நிதி திரட்டும் பொருட்டு இளையராஜாவுக்கு என்ற நிகழ்ச்சி நடத்துவதாக தயாரிப்பாளர் சங்கம் கடந்த 2016ல் முடிவெடுத்தது. இதன்படி, பிப்.2,3 தேதிகளில் இளைராஜாவுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில்,  இளையராஜா பாராட்டு விழாவை ஏன் ஒத்திவைக்க கூடாது என கேள்வி எழுப்பியதோடு,  இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத்தொடர்ந்து இன்று 2016 மற்றும் 2017 செலவுக்கணக்கை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்தது. மேலும், இந்த நிகழ்ச்சி மூலமாக இளையராஜாவுக்கு ரூ.25 லட்சமும், ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு ரூ.35 லட்சமும் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. 

இந்த சூழ்நிலையில், 2018 வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close