திமுக ஆட்சி வரும் வரை காத்திருக்கவும்: ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 02:57 pm
mk-stalin-requests-jactto-geo

மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுளளார். அதில், "மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி தீர்வு காண முடியாத ஒரு முதல்வரிடம், இனியும் நியாயம் எதிர்பார்ப்பது தவறு. திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும். ஆட்சி அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதோடு, அதிமுக அரசின் அராஜக நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close