ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விசாரணை: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 03:40 pm
minister-sengottaiyan-press-meet

பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன், "பள்ளிக் கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகும். புதிய பாடத்திட்டம் பற்றி கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம். இதற்காக ஆசிரியர்கள் குழு அயல்நாடுகளுக்கு சென்று பல்வேறு தகவல்களை திரட்ட உள்ளது.

பள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றி எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. ஆசிரியர் பயிற்சி தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close