எனது சாவுக்கு சென்னை போலீஸ் தான் காரணம் - தற்கொலை செய்த கால்டாக்சி ஓட்டுநரின் வாக்குமூலம்!

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 07:12 pm
chennai-call-taxi-driver-suicide

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் தகாத வார்த்தையில் திட்டியதால் கால்டாக்சி ஓட்டுநர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25ம் தேதி அண்ணாநகர் பாடி மேம்பாலம் அருகே ராஜேஷ் காருடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அவரை தகாத வார்த்தையால் மிகவும் மோசமாக திட்டியுள்ளனர். 

இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலைநகர் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக ராஜேஷ் வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், தனது சாவுக்கு காரணம் சென்னை போலீசார் தான் என்று கூறியுளளார். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசு தனிப்படை ஒன்றை அமைத்துள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close