சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 10:37 am
special-classes-on-saturday-sunday-due-to-jactto-geo-protest

 ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. 

இதையடுத்து, முதல்வரின் கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தலைவர் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு செல்லவில்லை என்பதால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close