உலக வங்கி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.2645 கோடி ஒப்பந்தம்

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 11:45 am
rs-2645-crore-contract

உலக வங்கி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ. 2645 கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில், நேரலை பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக்கல்வி நிகழ்ச்சி தொடக்க விழா இன்று நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "நீரழிவு நோயை வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்ளுவதன் மூலம் தடுக்கலாம் என்றும் ஊனம் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியை அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் நீரழிவு நோய்க்காக முழு பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், உலக வங்கியுடன் 2,645 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு முன்னிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரும் திங்கட்கிழமை ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் மக்கள் நல்வாழ்வு துறையை உலக அளவில் கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.

போலியோ சொட்டி மருந்து மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு ஒரே தவணையாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close