மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம்: அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 01:33 pm
minister-jayakumar-reaction-for-fisheries-announcement-in-budget

மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

2019-20 -ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். 

குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக, மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பியூஸ் கோயல் வெளியிட்டார். அவரது இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "மீன்வளத் துறைக்கு தனி அமைச்சகம் என்பது வரவேற்கத்தக்கதாகும். மீனவர்களின் வாழ்வில் இன்று முக்கியமான நாளாகும். மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது அதன் கடைசி பட்ஜெட்டா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமென தவிர, எதிர்க்கட்சிகள் அல்ல" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close