வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: அருண் ஜெட்லி புகழாரம்!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 03:43 pm
budget-2019-arun-jaitley-wishes-minister-piyush-goyal

அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இன்று 2019-20ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. நடுத்தர வர்க்க மக்களின் சுமையை குறைக்கும் விதமாகவே இந்த பட்ஜெட் பார்க்கப்படுகிறது. 

கடந்த 2014ல் இருந்தே மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பெரிய அளவில் பயன்பட்டு வருகிறது. தற்போது இந்த பட்ஜெட்டும் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கும், ஏழைகளுக்கும்பயன்படுவதாகவே அமையும்.

பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் பாஜக அரசு செய்தவற்றை ஆய்வு செய்யும் விதத்திலும், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல விஷயங்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close