இடைக்கால பட்ஜெட் குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போன்றது: கனிமொழி விமர்சனம்!

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 04:14 pm
dmk-kanimozhi-tweet-about-budget-2019

இடைக்கால பட்ஜெட் குழந்தைகளுக்கு சொல்லக்கூடிய கதை போன்றது என மாநிலங்களவை எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். 

2019-20ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சியின் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் திமுக மகளிரணி தலைவரும், ராஜ்ய சபா எம்.பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "குளிர்காலத்தில் சொல்லப்படும் தேவதை கதை தான் இந்த பட்ஜெட். இறுதி நாட்களில் அனைத்தும் நன்றாக முடிய வேண்டும் என்று நினைத்து செய்துள்ளனர். அதாவது தங்களது ஆட்சியை நன்றாக முடிக்க வேண்டும் என்று முயன்று இருக்கிறார்கள்.. ஆனால், அவர்களின் காலம் சென்றுவிட்டது, அது அவர்களுக்கு தெரியவில்லை" என்று கிண்டல் செய்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close